Breaking News
recent

யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் நடப்பது என்ன ….



யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் கண்டி மற்றும் திருகோணமலை பேருந்துகளின் நடத்துனர் மற்றும் சாரதிகள் அட்டகாசம்.

தினமும் காலை 7 மணி மற்றும் 7 .10 கு புறப்படும் இவ்விரு பேரூந்துகளிலுமே அரச மற்றும் தனியார் நிறுவன உயர் நிலை உத்தியோகத்தர்கள் பயணம் செய்து வருகின்றனர்.

எனவே இவர்கள் பேரூந்து நிலயத்திட்கு செல்லுகின்ற வேளைகளில் பேருந்தில் ஏறவேண்டாம் என அடாவடி செய்தல் மீறி ஏறினாள் தகாத வார்த்தைகளில்அவர்களை ஏசுவது பெண்கள் என்று கூட மதிக்காமல் நடப்பது போன்ற அநாகரிக செயட்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இது போன்ற செயட்பாடுகளை எமது பெரும்பான்மை இனங்கள் வசிக்கும் பிரதேசங்களில் இவர்களால் மேட்கொள்ள முடியுமா????

வட இலங்கை போக்குவரத்து நிலையத்திலேயே இவ்வாறான செயட்பாடுகள் இடம் பெறுவது மிகவும் மனம் வருந்த தக்க ஒன்றானதாகும்.

போக்குவரத்து அமைச்சர் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமும் இதனால் பெருமளவிலான கிளிநொச்சி மற்றும் மாங்குளம் வரை பயணிக்கும் பயணிகள் மற்றும் அரச ஊழியர்கள் பாதிக்க படுகின்றனர்.

எனவே வட பிராந்திய முகாமையாளர் காலை வேளைகளில் இடம்பெறும் இந்த அநியாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும் இது தொடர்பான தகுந்த ஆதாரம் விரைவில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும்.

மேலும் இதே நிலை தொடர்ந்தால் ஜனாதிபதியின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.