Breaking News
recent

காணாமல் போனோர் தொடர்பாக எதிர்வரும் 9ம்திகதி அலரிமாளிகையில் பேச்சுவார்த்தை



காணாமல் போனவர்கள் தொடர்பாக எதிர்வரும் 9ம் திகதி அலரிமாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்த்தன தெரிவித்துள்ளார்.


இந்த உறுதி மொழியை அடுத்து காணாமல் போனவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.


நேற்று மாலை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன நீராகாரம் வழங்கியதை தொடர்ந்து உண்ணாவிரதம் முடிவுற்றது.


காணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலர் கடந்த 4 நாட்களாhக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து நேற்றைய தினம் மாலை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அவர்களுடன் கலந்துரையாடினார்.


காணாமல்போனோர் தொடர்பில் எதிர்வரும் 9ம் திகதி கொழும்பு அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான தீர்வொன்று காணப்படும் என்று இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.


இதனை ஏற்றுக்கொண்ட உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தோர் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவந்திருந்தனர்.


எதிர்வரும் 9 ஆம் திகதி கொழும்பு அலரி மாளிகையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க, நீதித்துறை அமைச்சர் காலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் நடத்தப்படும் என்று உறுதி மொழி அளிக்கப்பட்டதை தொடந்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.