Breaking News
recent

வரலாற்று வெற்றியை பதிவு செய்து 20/20 தொடரை வென்றது இலங்கை அணி!

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமாக இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.

நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 5 விக்கட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த தொடர் வெற்றியின்மூலம் இலங்கை அணி தென்னாபிரிக்காவில் வரலாற்றில் முதல் முறையாக தொடர் ஒன்றை வெற்றிக்கொண்ட பெறுமையை பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் இலங்கை அணி தென்னாபிரிக்காவில் வைத்து அந்த அணியுடன் எந்த ஒரு தொடரையும் வெற்றிக்கொண்டதில்லை.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.