Breaking News
recent

யாழில் டெங்கு பாதிப்பு அதிகம்..! 15 நாட்களில் 1311 பேர் பாதிப்பு



கடந்த 15 நாட்களுக்குள் 1311 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த டெங்கு காய்ச்சலால் யாழ். மாவட்டத்திலும் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன் அடிப்படியில் யாழ். மாவட்டத்தில் 126 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 342 பேர், கம்பஹா மாவட்டத்தில் 84 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 38 பேரும் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், கடந்த 15 நாட்களில் கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாத்திரம் 157 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூன்று நாட்களுக்கும் அதிகமாக காய்ச்சல் காணப்பட்டால், உடனடியாக வைத்தியரை நாடுமாறும் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.