Breaking News
recent

புலமைப்பரிசில்: மீள் திருத்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய திகதி அறிவிப்பு

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பெறுபேறுகள் தொடர்பான மீள் திருத்த விண்ணப்பங்களை எதிர்வரும் 4 ஆம் திகதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலை அதிபர்கள் ஊடாக இந்த மீள் திருத்த விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படல் வேண்டும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

2016 ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபெறுகள் நேற்று இரவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.

www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்கள் ஊடாக பரீட்சை பெறுபேற்றை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் கொழும்பு மற்றும் ஶ்ரீஜயவர்தனபுர கல்வி வலயங்களுக்குட்பட்ட மாணவர்களுக்கான பெறுபேறுகளை இன்று காலை 9 மணி தொடக்கம் பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் பிரிவிற்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பாடசாலைகளுக்கான பெறுபேறுகள் தபால் ஊடாக இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.