Breaking News
recent

காலஞ்சென்ற அன்ரனி ஜெகநாதனின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன

வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவராக செயற்பட்ட காலஞ்சென்ற அன்ரனி ஜெகநாதனின் இறுதிக்கிரியைகள் முல்லைத்தீவு, உன்னாப்பிளவு பொது மயானத்தில் இன்று நடைபெற்றன.

காலஞ்சென்ற அன்ரனி ஜெகநாதனின் பூதவுடலைத் தாங்கிய பேழை இன்று காலை 11 மணியளவில் முல்லைத்தீவு மணல் குடியிருப்பிலுள்ள அன்னாரின் இல்லத்திலிருந்து முற்றவெளி பொது மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அன்னாரின் பூதவுடலுக்கு அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மைதானத்திலிருந்து முல்லைத்தீவு கிறிஸ்தவ தேவாலயத்திற்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டது.

அதனையடுத்து, உன்னாப்பிளவு பொது மயானத்தில் அன்ரனி ஜெகநாதனின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.