Breaking News
recent

தீவக மாணவி வித்தியா கொலை வழக்கு சில வாரங்களுக்குள் மேல் நீதிமன்றுக்கு மாற்றம்

தீவகமாணவி வித்தியா கொலை வழக்கு  சில வாரங்களுக்குள் , யாழ்.மேல் நீதிமன்ற நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் தெரிவித்துள்ளார்.

தீவகமாணவி வித்தியா கடத்தப்பட்டு பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தப்பட்டு கடந்த ஆண்டு மே மாதம் 13ம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை 12 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு , விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர். அது தொடர்பான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.

அந்நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது விளக்கமறியலில் வைக்கபப்ட்டு உள்ள 12 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , மாணவி சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி பா.றஞ்சித்குமார் வழக்கின் தற்போதைய நிலைமை தொடர்பில் கேட்டு இருந்தார்.

அதற்கு பதிலளித்த நீதிவான் வழக்கு விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டு உள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களத்தால் இந்த மாத இறுதிக்குள் குற்றபகிர்வு பத்திரம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்வதற்கான உத்தேச நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அதனை அடுத்து வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 18ம திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார். அதுவரைக்கும் 12 சந்தேகநபர்களையும் , விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.