Breaking News
recent

வரட்சியால் வற்றிய நீர் நிலைகள்: மட்டக்களப்பில் விவசாயம், கால்நடை வளர்ப்பு கடுமையாகப் பாதிப்பு

நாட்டில் நிலவும் வரட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியன பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

நிலவும் வரட்சி காரணமாக, நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 3997 குடும்பங்களைச் சேர்ந்த 14,322 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நாவிதன்வெளி, அன்னமலை, சவளக்கடை, மத்திய முகாம், சொரிக்கல்முனை உள்ளிட்ட 20 கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் கடும் வரட்சி நிலவுகின்றது.

இதனால், நீர் நிலைகள் வற்றியுள்ளதுடன், விவசாய நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு – போரைத்தீவுப்பற்று பிரதேச செலகத்திற்கு உட்பட்ட 4747 குடும்பங்களைச் சேர்ந்த 15,718 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திக்கோடை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதுடன், குடிநீர் பௌசர் வரும் வரை மக்கள் காத்திருந்து நீரைப் பெற்றுக்கொள்கின்றனர்.

Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.