Breaking News
recent

தோட்டத் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது: பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடில்லை



நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி 9 ஆவது நாளாக தோட்டத்தொழிலாளர்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மலையகத்தின் பல்வேறு பகுதிகளில், கொடிகளை ஏந்தியவாறும் டயர்களை எரித்தும் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




இதேவேளை, தோட்டத் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பிலும் இடைக்கால நிவாரணம் குறித்தும் அரசியல்வாதிகள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.
காணொளியில் காண்க…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலும் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
காணொளியில் காண்க…

இந்த நிலைமையின் கீழ், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில், தொழில் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன, தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் முதலாளிமார் சங்கம் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.