Breaking News
recent

வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்த காலத்தில் வடக்கில் ஒழுக்கம் தலைசிறந்ததாக விளங்கியது-விஜயகலா மகேஸ்வரன்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்த காலத்தில் வடக்கில் ஒழுக்கம் கடைப்படிக்கப்பட்டதாக சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

அந்த காலப்பகுதியில் அலுவலகங்களில் அல்லது வீடுகளில் பாலியல் துஸ்பிரயோகங்களோ சிறுவர் துஸ்பிரயோகங்களோ, அல்லது கணவன் மனைவி பிரச்சனைகளோ காணப்படவில்லையெனவும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துகல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் பதுங்குழிகளில் தண்டிக்கப்பட்டிருந்தார்கள். இவ்வாறு தண்டனை பெற்று திருந்தியவர்கள் பலர் இன்று பல பிரபலமான பதவிகளிலும் அதிகாரிகளாகவும் உள்ளார்கள்.

ஆனால் இன்று அந்த நிலைமை முற்றாக மாற்றமடைந்துள்ளதாகவும் , அவ்வாறான ஒரு சூழலை ஏற்படுத்தப்பட வேண்டியதுடன் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் நீதிபதிகளது வாய்கள் கட்டப்பட்ட நிலையிலும் அவர்கள் அச்சுறுத்தப்பட்டிருந்த நிலையிலும் காணப்பட்டிருந்தனர். ஆனால் இன்று அந்த நிலைமை மாற்றப்பட்டிருக்கின்றது.



சிறுவர் சிறுமியர் துஸ்பிரயோகம், அவர்களை வேலைக்கு அமர்த்துதல் பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்களும் தொந்தரவுகளும் தற்போது அதிகரித்துள்ளன.

இது போன்ற சம்பவங்களுக்கு நீதிமன்றங்களிலே குறுகிய காலத்தில் விசாரணை நடாத்தி சட்டத்தினூடாக தன்டனை வழங்கப்பட வேண்டும்.



அலுவலகங்களிலுள்ள அதிகாரிகளினது அறைகளுக்கு போடப்பட்டுள்ள கறுப்பு கண்ணாடிகள் நீக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக தனது அமைச்சினூடாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மாணவர்களின் கல்வி வீணடிக்கப்பட கூடாது.

 வடக்கு கிழக்கில் யுத்தத்திற்கு முன்னர் இருந்த கல்வி வளர்ச்சியை விட யுத்தத்திற்கு பின்னரான கல்வி வளர்ச்சி பின்னடைந்துள்ளது.

பாடசாலைகளில் இடம்பெறுகின்ற பிரச்சனைகளுக்காக மாணவர்களை வீதியில் இறக்கி போராட வைக்க முடியாது. பாடசாலைகளில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஒர் கட்டமைப்பு முறையுள்ளது. ஆசிரியர், அதிபர், வலயம், மாகாண கல்விப் பணிப்பாளர் அதனையும் தாண்டி மாகாண கலவியமைச்சு, மத்திய கல்வியமைச்சு என்ற ஒரு கட்டமைப்பு உள்ளது.

இதனை விடுத்து மாணவர்களை வீதியில் இறக்கி போராட விடுவதும் அரசியல் வாதிகளிடம் செல்வதும் ஏற்றுக்கொள்ள முடியாது. உடுவில் மகளீர் கல்லூரி விடயத்திலும் இவ்வாறே இடம்பெற்றது. உடுவில் மகளீர் கல்லூரி பிரச்சினை தொடர்பாக தன்னிடம் வந்திருந்த போது தெளிவாக கூறியிருந்தேன், இப் பிரச்சனையில் ஒர் அரசியல்வாதி தலையிட்டு எதாவது நன்மை தீமை இடம்பெறுமாயின் அது பாடசாலையின் எதிர்காலத்தை பாதித்துவிடும் அதனால் தான் நான் இதனை தவிர்த்திருந்தேன்.

ஆனால் மாணவிகளை ஜனாதிபதியின் காலில் சீருடையுடன் விழவைத்து மாணவிகளை அவமானப்படுத்தியிருந்ததுடன் அவர்களை உளவியல் ரீதியாகவும் பாதிப்படைய செய்திருந்தனர். எனவே தான் நான் குறிப்பிடுகின்றேன்.

பாடசாலைகளது பிரச்சனைகளின் போது அரசியல்வாதிகள் தலையீடு செய்யக்கூடாது எனவும் மாணவர்கள் வீதியிலே இறங்கி போராடுவதை எந்த அதிபரும் ஆசிரியரும் அனுமதிக்க கூடாது எனவும் கூறினார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.