Breaking News
recent

சர்வதேச வர்த்தகத்தைப் பலப்படுத்துவதற்கானபொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பு கடன் சுமையை குறைப்பதற்கு உறுதி

சர்வதேச வர்த்தகத்தைப் பலப்படுத்துவதற்கான பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பின் முக்கிய அங்கத்துவ நாடுகள் நாட்டின் கடன் சுமையை குறைப்பதற்கு முன்வந்துள்ன. 
 
1961ம் ஆண்டில் நிறுவிப்பட்ட முக்கிய அங்கத்துவ நாடுகள அமெரிக்கா, ஜேர்மன்,பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகளே இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளன

இந்த நாடுகளின் தூதுவர்கள் சமிபத்தில் நிதியமைச்சில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் விரிவான முறையில் பேத்துவார்த்தை நடத்திய பின்னர். இதனை உத்தியோகபூர்மாக அறிவித்துள்ளனர். இந்த ஆதரவைத் தெரிவித்திருப்பதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நாடுகள் சர்வதேச வர்த்தகத்தைப் பலப்படுத்துவதற்காக 1961ம் ஆண்டில் நிறுவிய பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பின் முக்கிய அங்கத்துவ நாடுகளாகும். நாடுகளுக்கு இடையில் கடன்களைப் பரிமாறிக் கொள்ளும் போது வட்டி வீதத்தை தீர்மானிப்பதும் இந்த அமைப்பே ஆகும்.

30 வருட கால யுத்தத்தின் பின்னர், நாட்டைப் பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்குத் தேவையான செயற்திட்டங்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குத் தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதற்கமைய, குறைந்த சலுகை வட்டி அடிப்படையிலான கடனை பெற்றுக் கொள்வதற்கு உலக வங்கியிடம் பரிந்துரை செய்யுமாறு இதன்போது தூதுவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதற்கு தூதுவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். தமது நாடுகளின் உலக வங்கி பிரதிநிதிகள் ஊடாக இந்த கோரிக்கையை உலக வங்கிக்கு அறிவிப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது நாட்டின் மொத்தக் கடன் 8ஆயிரத்து 500 பில்லியன் ரூபாவாகும். இவற்றில் 42சதவீதமானவை வெளிநாட்டுக் கடன்களாகும். இந்த கடன்களுக்காக இலங்கை செலுத்தி வரும் வட்டி வீதத்தைக் குறைப்பது தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க ஊடகப்பிரிவு
        நன்றி...
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.