Breaking News
recent

விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும் - உதய கம்மன்பில

வடக்கு முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டுமென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். உடனடியாக விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.


தமிழ் மக்கள் பேரவையினால் நடத்தப்பட்ட எழுக தமிழ் போராட்டத்திற்கு அரச சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இதன்படி, வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் பிரிவினைவாத போராட்டமொன்று அரச அனுசரணையில் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


புறக்கோட்டையில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இனவாதத்தை தூண்டும் விக்னேஸ்வரன் உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.