Breaking News
recent

தமிழ் மக்களின் இலட்சியம் நிறைவேறும்வரை நாம் ஓயமாட்டோம் என சிவகாசி பட்டாசு வெடிக்கும் டக்ளஸ்


தமிழ் மக்களின் இலட்சியம் நிறைவேறும்வரை நாம் ஓயமாட்டோம்.
எழுக தமிழ் கூட்டுப்பேரணியில்  டக்ளஸ் உரை நிகழ்த்தியுள்ளார்.

 மக்களின் இலட்சிய கனவுகள் நிறைவேறும்வரை நாம் ஒரு போதும் ஓயப்போவதில்லை. எழுக தமிழ் கூட்டுப்பேரணியை நாம் வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றோம். தொடர்ந்தும் இதுபோன்ற எழுச்சிப் போராட்டங்களை நாம் நடத்துவோம்.என்று  டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுக தமிழ் கூட்டுப் பேரணியில் கலந்து கொண்டிருந்த  மக்கள் மத்தியில் உரையாற்றினார்.


தமிழ்த் தேசியத்திற்காகவும், எமது மக்களின் அரசியல் உரிமைக்காகவும், எமது மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்காகவும் போராட்டங்களை முன்னெடுத்ததுடன். அதற்காக நாம் இரத்தமும் சிந்தியவர்கள். இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர் யதார்த்த அரசியல் சூழலை கருத்தில் கொண்டு நாம் எமது போராட்ட வழிமுறையை மாற்றிக் கொண்டவர்கள்.

ஆனாலும் எமது மக்களின் அரசியல் அபிலாiஷகளையும்,தமிழ் தேசிய உணர்வுகளையும் ஏற்று அவைகளுக்காக நாம் தொடர்ந்தும் எமது தனித்துவமான யதார்த்த வழிமுறையில் நின்று அர்ப்பணிப்புடன் உழைத்துவருகின்றோம்.

அன்று நாம் அதிகாரங்களில் இருந்தபோது எமது அரசியல் பலத்திற்கு ஏற்றவாறு எமது மக்களின் பிரச்சினைகள் பலதையும் தீர்ப்பதில் முடிந்தளவு வெற்றி கண்டிருக்கின்றோம். ஆனாலும் இன்று நாம் எமது மக்களின் குரலாகவும் ஒலித்து வருகின்றோம்.

ஆகவே அன்று செயலில், இன்று குரலில் என்ற வகையில் நாம் எமது மக்களின் அரசியல் அபிலாiஷகளுக்காக தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உழைப்போம் என உறுதி எடுத்துள்ளோம்.

ஒருமித்த குரலுக்கு பலம் சேர்கக்வே இன்று நாம் இங்கு ஒன்று திரண்டிருக்கின்றோம். சக தமிழ் அரசியல் கட்சித் தலைமைகளுடன் நாம் எமது யதார்த்த அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக வேறுபட்டு நின்றாலும், எமது மக்களின் ஒருமித்த குரலாக ஒலிப்பதில் அரசியல் முரண்பாடுகளுக்கு அப்பாலும் ஒன்று சேர்ந்து வெளிப்படைத் தன்மையோடு உழைக்கத் தயாராகவே இருக்கின்றோம் என்பதை தொடர்ந்தும் நாம் கூறிவந்திருக்கின்றோம்.

நாம் இவ்வாறு கூறுவதை, யாருடனும் கூட்டுக்கள் அமைத்து ஈ.பி.டி.பி தன்னை கழுவிக்கொள்ள முற்படுகின்றது என்று யாரேனும் நினைத்தால் அது தவறாகும். ஈ.பி.டி.பி தன்னைக் கழுவிக்கொள்வதற்கு சேறு குளித்துக் கொண்டிருக்கவில்லை. எம்மீது அரசியல் பயம் கொண்டவர்களாலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாலும் எம் மீது சேறு பூசப்பட்டிருக்கின்றது. அதையும் எதிர் கொண்டு நாம் மக்களுக்க சேவை செய்யும் கட்சியாகவே இருந்து வருகின்றோம்.

மக்கள் எமக்கு வழங்கிய அரசியல் அதிகாரத்துக்கு மேலதிகமாகவும் தற்துணிவோடு மத்திய அரசுகளை எதிர்கொண்டு மக்களுக்கு சேவை செய்திருக்கின்றோம். எம்மை நம்பி வாக்களித்த மக்களினதும், எமது பாதையில் அணி திரண்டு வரும் மக்களினதும் அபிலாiஷகளை பிரதிபலித்துச் செயற்பட்டு வருகின்றோம்.

ஆகையால்தான் எமது அழைப்பை ஏற்று மக்கள் ஆயிரக் கணக்கில் அணி திரண்டு வருகின்றார்கள். இன்றும் அலை அலையாக அணி திரண்டு வருவதற்குத் தயாராகவும் இருக்கின்றார்கள். எம் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு காலம் முழுவதும் என்னாலும் நன்றியுடன் நாம் இருப்போம். ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியும் அவர்களுக்காக இருக்கும்.

எமது மக்களுக்காக உண்மையான அர்ப்பணிப்போடு சேவை செய்துவரும் நாம் எமது தனித்துவ அடையாளங்களையும், பாதுகாக்கும் அவசியமும் எமக்கு இருக்கின்றது.

ஆகவே இன்று நடக்கும் எழுக தமிழ் கூட்டுப் பேரணியில் நாம் எமது தனித்துவ அடையாளங்களோடு அணி திரண்டிருக்கின்றோம்.

அரசியல் வேறுபாடுகள் கடந்து உரிமைக்குரலாக ஒருமித்து ஒலிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடனேயே நாம் எழுக தமிழ் பேரணியை, கூட்டுப்பேரணியாக நடத்தி முடிப்பதற்கு எமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தோம். ஆனால் எழுக தமிழ் பேரணியை ஏற்பாடு செய்தவர்களோ,

நாம் வெளிப்படுத்திய ஆதரவானது அவர்களுக்கு ஆட்களை ஒன்று திரட்டிக் கொடுப்பதற்காக பயன்படட்டும் என்று இருந்திருக்கின்றார்களே தவிர, ஈ.பி.டி.பியின் நேசக்கரத்தை தோழமையோடு பற்றிக்கொண்டு கூட்டுப் பேரணியாக எழுக தமிழ் பேரணியை மாபெரும் வெற்றியடைச் செய்ய விரும்பவில்லை.

ஆனாலும் ஈ.பி.டி.பிக்கு மக்கள் பலம் இருக்கின்றது என்பதையும், ஈ.பி.டி.பியால் பல்லாயிரம் பேரை அணி திரட்ட முடியும் என்பதையும் அவர்கள் தெரிந்திருக்கின்றார்கள். அதற்கு சாட்சியங்களாகவே எனது மக்களாகிய நீங்கள் மிகக் குறுகிய கால அழைப்பில் ஆயிரக் கணக்கில் இங்கே கூடியிருக்கின்றீர்கள்.

நீங்கள்தான் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பலம். நீங்கள்தான் எமது உழைப்பின் பலாபலன். நீங்கள்தான் எமது அர்ப்பணிப்பக்கான உண்மையான வெகுமதி என்பதை உரத்துக் கூறுவதில் பெருமையடைகின்றேன்.
பாசமிகு மக்களே..

எமக்கென்று ஒரு இலட்சிய கனவுண்டு. எமது மக்களின் இலட்சிய கனவுகள் நிறைவேறும்வரை நாம் ஒரு போதும் ஓயப்போவதில்லை. எழுக தமிழ் கூட்டுப்பேரணியை நாம் வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றோம். இதுபோன்ற எழுச்சிப் போராட்டங்களை நாம் எதிர்காலத்திலும் கூடிய மக்கள் சக்தியுடன் நடத்துவோம் என்று உறுதி எடுப்போம். என்றும் கூறிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,

உரிமைக்கு குரல் கொடுப்போம். உறவுக்கு கரம் கொடுப்போம். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி. நாம் செல்லும் பயணம் வெல்லும் வெல்க எழுக தமிழ் கூட்டுப்பேரணி. உரிமைகளுக்காக எழுக தமிழ்

கௌரவமான எதிர்காலத்திற்காக எழுக தமிழ் என்று கோசங்களையும் மக்கள் மத்தியில் எழுப்பி தன்னுடைய உரையை நிறைவு செய்தார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.