Breaking News
recent

கதிர்காமம் புனித பிரதேசம் அபிவிருத்தி

கதிர்காமம் புனித நகர பிரதேசத்தை அபிவிருத்திச்செய்வதற்காக பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
புனித நகரம் மற்றும் அதனையடுத்துள்ள பகுதிகளை அபிருத்திச்செய்வதற்காக அபிவிருத்தித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுள்ளதாக றுகுணு கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே ரி.பி.குமாரகே தெரிவித்தார்.

இதன் கீழ் கதிர்காம ஆலயத்தின் அருகாமையில் அன்னதான மண்டபமொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் இலவசமாக தங்குதவற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக கதிர்காமம் புதிய நகரத்தில் 160 அறைகளைக் கொண்ட ஓய்வு மண்டபமொன்றை நிர்மாணிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருதாகவும் றுகுணு கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே ரி.பி.குமாரகே கூறினார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.