Breaking News
recent

வவுனியாவில் பதற்றம்:A9ல் சிங்கள மக்கள் வீதியினை மறித்து ஆர்ப்பாட்டம்

வவுனியா தாண்டிக்குளம் கொக்குவெளி பிரதேச சிங்களமக்கள் இன்று (29.09.2016) மாலை 6.30மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தனிநபர் ஒருவரினால் கொக்குவெளி கிராமத்திற்குள் புகுந்து கிராமத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இவ்வாறு பல முறை இடம்பெற்றதாலும் கொதித்தெழுந்த கிராமமக்கள் ஏ9 வீதியினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில மணிநேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா,மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அவர்கள் அவர்களின் பிரச்சனைகள் தொடர்பாக கேட்டதுடன் அவர்களை வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பணித்தார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.