Breaking News
recent

கல்லூரி மாணவி உள்பட 10 பேரை காதலித்து மோசடி பெண்களின் ஆபாச...

சென்னை

சென்னையில் கல்லூரி மாணவி உள்பட 10 இளம்பெண்களை காதலித்து நெருக்கமாகப் பழகி அவர்களின் ஆபாச படங்களை ‘பேஸ்–புக்’கில் வெளியிட்ட காதல் மன்னனை போலீசார் தேடி வருகிறார்கள்.

பரபரப்பு புகார்

சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜஸ்ரீ (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தாயார் சென்னை சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–

எனது மகளின் ஆபாச புகைப்படத்தை சாமுவேல் என்ற இளைஞர் தனது ‘பேஸ்–புக்’கில் வெளியிட்டுவிட்டார். அந்த இளைஞர் எனது மகளை காதலிப்பதாகச் சொல்லி அடிக்கடி பின்தொடர்ந்து வந்துள்ளார். எனது மகள் அவரது காதலை ஏற்கவில்லை. திடீரென்று அந்த வாலிபர் தனது ‘பேஸ்–புக்’கில் எனது மகளின் புகைப்படத்தை கிராபிக்ஸ் மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளார்.

இதுபோல ஏராளமான பெண்களை காதலித்து நெருக்கமாகப் பழகி அந்த இளம்பெண்களின் ஆபாச புகைப்படங்களையும் தனது ‘பேஸ்–புக்’கில் வெளியிட்டுள்ளார். அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

தப்பி ஓட்டம்

இந்த புகார் மனு மீது சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசி உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். புகார் கூறப்பட்ட சாமுவேல் என்ற இளைஞரை அவர் வசித்த மயிலாப்பூர் வீட்டில் போய் பெண் போலீசார் தேடியபோது, அவரது வீடு பூட்டிக்கிடந்தது. அவர் தப்பியோடிவிட்டதாக தெரிகிறது.

போலீஸ் விசாரணையில் கல்லூரி மாணவி உள்பட 10 இளம்பெண்களை தனது காதல் வலையில் வீழ்த்தி உல்லாச லீலைகளில் காதல் மன்னன் சாமுவேல் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. காதல் மன்னன் சாமுவேல் பிடிபட்டால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.