Breaking News
recent

காதல் திருமணம் செய்த கர்ப்பிணி பெண் தீக்குளித்து சாவு...

திருவொற்றியூர், ஜூன்.14–

வீட்டுவேலை செய்யத்தெரியவில்லையே என பாட்டி திட்டியதால் காதல் திருமணம் செய்த 2 மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.


கர்ப்பிணி பெண்
திருவொற்றியூர் அப்பர்சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(வயது23) வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா (19) இருவரும் கடந்த 4 மாதத்திற்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டனர். தற்போது பிரியா 2 மாத கர்ப்பமாக உள்ளார்.

சுந்தர மூர்த்தியின் பெற்றோர் காலமாகி விட்டதால் கணவன்–மனைவி இருவரும் பாட்டி மற்றும் தங்கையுடன் ஓரே வீட்டில் வசித்து வந்தனர்.

பாட்டி திட்டியதால் தற்கொலை
புதுப்பெண் பிரியா ஒழுங்காக வீட்டு வேலைகளைசெய்வது இல்லை என்று கூறி பாட்டி அடிக்கடி திட்டியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த பிரியா வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதனால் அவரது உடலில் தீப்பிடித்து எரிந்தது. இதில் வேதனை தாங்காமல் அவர் அலறி துடித்தார். பிரியாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா பரிதாபமாக இறந்துபோனார்.

இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குபதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அவரது கணவர் சுந்தரமூர்த்தியை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நகைகள் கொள்ளை

* நங்கநல்லூரை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ராஜன்(70) என்பவரது வீட்டில் 3 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
* கிண்டியில் இருந்து அடையாறு நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்ற கார் ஆலந்தூர் மடுவங்கரையை சேர்ந்த பிரவீன்ராஜ் என்பவரது மோட்டார் சைக்கிளில் மோதியதில் அவர் இறந்தார்.
--–
சென்னை மாநகர செய்தி சிதறல்
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.