Breaking News
recent

எனது ஆட்டத்தைக் கண்டு லாரா அஞ்சினார்:சுயசரிதையில் கெயில் தகவல்

2005-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நான் 317 ரன்கள் குவித்தபோது எனது ஆட்டத்தைக் கண்டு பிரையன் லாரா பயந்தார். நான் அவருடைய சாதனையை முறியடித்துவிடுவேனோ என அவர் அஞ்சினார் என்று கிறிஸ் கெயில் தனது சுயசரிதையில் தெரிவித்துள்ளார்.


மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ் கெயில், "சிக்ஸ் மெஷின்: ஐ டோன்ட் லைக் கிரிக்கெட்... ஐ லவ் இட்' என்ற தலைப்பில் சுயசரிதை எழுதியுள்ளார். அதில் லாரா குறித்து அவர் கூறியிருப்பதாவது:

சில வீரர்கள் தங்களின் சாதனைகள் முறியடிக்கப்பட்டுவிடுமோ என்று கவலை கொள்கிறார்கள். 2005-இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லாரா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து வீரர்களின் "டிரெஸ்ஸிங்' அறைக்கு சென்ற அவர், புத்தகம் படிக்க ஆரம்பித்தார்.

ஆனால் நான் அசத்தலாக ஆடியபோது அவருக்குள் அச்சம் தொற்றிக் கொண்டது. அவருடைய சாதனையை (டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்- 400) நான் முறியடித்துவிடுவேனோ என்று அவர் அஞ்சினார். அதனால் "டிரெஸ்ஸிங்' அறையில் இருந்து வெளியே வந்து அடிக்கடி ஸ்கோர் போர்டை பார்த்துவிட்டு வந்தார். இதை ராம்நரேஷ் சர்வான் பார்த்துக் கொண்டிருந்தார்.

மதிய உணவு இடைவேளை மற்றும் தேநீர் இடைவேளையின்போது நான் "டிரெஸ்ஸிங்' அறைக்கு சென்றேன்.

அப்போது லாரா என்னிடம் எதுவும் பேசவில்லை. எனக்கு எந்த ஆலோசனையும் கூறவில்லை. நான் மீண்டும் பேட் செய்ய சென்றபோது அவர் வழக்கம்போல் ஸ்கோர் போர்டை பார்த்து கவலைப்பட்டு கொண்டிருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.