Breaking News
recent

இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள்குடியேற்ற நடவடிக்கை!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த 14,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களை மீளக் குடியமர்த்த வேண்டியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது
.
இக்குடும்பங்களில் 11,000 குடும்பங்கள் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே இருக்கின்றார்கள். தற்போது யாழ் மாவட்டத்தில் 1,109 குடும்பங்கள் தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 31 நலன்புரி முகாம்களில் வாழ்கின்றனர். இவ் 1,109 குடும்பங்களில் 641 குடும்பங்கள் காணியற்ற குடும்பங்களாக இருக்கின்றனர் என அமைச்சரவை தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, மக்களை மீளக் குடியமர்த்துவதற்காக காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 65 ஏக்கர் காணியை யாழ். மாவட்ட செயலகம் அடையாளம் கண்டுள்ளது. குறித்த இடத்தில், முகாம்களில் தங்கியுள்ள காணியற்ற 400 குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்காக இந்தக் காணியை அரசாங்கம் சுவீகரிப்பதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. எனவே குறித்த காணியினை விடுவித்து அதனை அரச உடைமையாக்கி உடனடியாக பகிர்ந்தளிப்பதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம். சுவாமிநாதன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் 2016 மார்ச் இறுதி வரையில் 2,51,000 இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். எனினும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்னமும் 14,000 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ள நிலையிலுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

The Official Government News Portal of Sri Lanka
          Thank you...
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.