Breaking News
recent

ஸ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய இரதோற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது

ஈழத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர் திருவிழா நேற்றைய தினம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

உலகப் பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாளின் வருடாந்த,மகோற்சவம் கடந்த(06.06.2016)திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து தினமும் சிறப்பாக திருவிழாக்கள் நடைபெற்று( 19.06.2016)ஞாயிற்றுக்கிழமை  காலை ஸ்ரீ நாகபூசணி அம்பாள் தேவஸ்தானத்தில், அதிகாலை முதல் அபிஷேக பூஜைகள் வசந்த மண்டப பூஜைகளும் நடைபெற்று
அதனைத் தொடர்ந்து பக்தர்கள் புடைசூழ,நாகபூசணி அம்பாள் வெளிவீதி எழுந்தருளிய காட்சி அடியார்களை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது.

இரதோற்சவத்தில் பெருந்திரளான பக்த அடியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.







யாழ்ப்பாண செய்தியாளர்..........
தர்மகுலசிங்கம் தயாளன்.
 இராசு தீபன்
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.