Breaking News
recent

யாழ் நகரில் இராணுவத்தினரின் வாகனம் மோதி பெண் ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்



யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகம் முன்பாக இராணுவ வாகனம் மோதி பெண்ணொருவர் உயிரிழந்து உள்ளதுடன் மற்றுமொரு பெண்ணொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

யாழ்.மூன்றாம் குறுக்கு தெருவில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகம் முன்பாக இன்று காலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்று உள்ளது.

குறித்த விபத்து சம்பவத்தை அடுத்து குறித்த பகுதியில் பெருமளவான பொது மக்கள் அங்கு கூடி இருந்தனர். அதனை தொடர்ந்து பெருமளவான பொலிசாரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டமையால் பதட்டம் ஏற்பட்டது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.