Breaking News
recent

முதலீட்டிற்காக வாடிக்கையாளரை குஷிபடுத்த பாலியல் தொழிலாளி அனுப்பிய வங்கி



அமெரிக்காவில் கோல்டுமேன் சேச் என்ற  வங்கியின் உயர் அதிகாரி யூசுப் கப்பாஜ்.லிபியா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி முகமது கடாபியின் தலைமை அதிகாரி ஒருவரை குஷிபடுத்தி தனது வங்கிக்கு ரூ 10 கோடி முதலீடு ஈட்ட எண்ணி உள்ளார்.

இதனை தொடர்ந்து ரஷ்யா நாட்டை சேர்ந்த பாலியல் தொழிலாளியான மெசிலா ( வயது 25) என்பவரை தொடர்புக்கொண்டு ரேட் பேசி உள்ளார்.. இதன் பிறகு, 5,00,000 பவுண்ட் கட்டணம் பேசி முடிவு செய்யப்பட்டதும், அவரை சொகுசு விமானத்தில் துபாய் அனுப்பி வைத்துள்ளார்.

துபாய் சென்ற பாலியல் தொழிலாளி குறிப்பிட்ட அந்த வாடிக்கையாளருடன்  ஜாலியாக இருந்து உள்ளார். இதன் மூலம் வங்கியில் அவர் மூலம் சுமார் 846 மில்லியன்  முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு நிகழ்ந்த இந்த சம்பவம் வெளியானதை தொடர்ந்து, தற்போது முறைகேடாக பெறப்பட்ட முதலீட்டை திருப்பி அளிக்க வேண்டும் என லிபியா அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் பாலியல் தொழிலாளியை அனுப்பி வைத்த யூசுப் கப்பாஜ் தற்போது லிபியா நாட்டிற்கு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.