Breaking News
recent

வித்தியா கொலை வழக்கு – பொதுமக்களுக்கு அழைப்பு!



யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் தகவல் அறிந்த பொதுமக்கள் சாட்சியாக வரவேண்டும் எனவும் அவ்வாறு வருபவர்களுக்கு நூறுவீதம் முழுமையான பாதுகாப்பை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இவ் வழக்கு  புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.எம்.றியால் இதனைத் தெரிவித்தார்.

விசாரனையின் போது,
சம்பவம் தொடர்பில் இன்னுமொருவர் இரகசிய சாட்சியம் கூற இருப்பதாக குற்றப்புலனாய்வு அதிகாரி மன்றில் தெரிவித்தார்.

அத்துடன் சம்பவம் இடம்பெறுவதற்கு முதன் நாள் குறித்த பெண்ணை 9ஆவது சந்தேகநபர் கடத்துவதற்கு முயற்சித்திருந்தமையும் தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் மன்றில் தகவலளித்தனர்.

குறித்த வழக்கு தொடர்பாக முழுமையாக பரிசிலித்து பார்த்தும் சமர்பிக்கப்பட்ட அறிக்கையும் முழுமையாக பரிசிலித்தே மரபணு அறிக்கை தொடர்பாக தெரிவிக்க முடியும் என்று நீதிவான் தெரிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக அறிக்கை சமர்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அவ் அறிக்கை சமர்பிக்கப்படமை தொடர்பிலும் நீதிவானிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் நீதிவான் தெரிவித்திருந்தார்.

Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.