Breaking News
recent

சிறுமி-பாட்டி மீது ஆசிட் வீச்சு இளைஞருக்கு வலைவீச்சு

கோவா,

கோவாவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமி மற்றும் அவரது பாட்டி மீது ஆசிட் வீசிவிட்டு தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவாவில் மபுசா நகரில் குய்ரிம் கிராமத்தில் உள்ள வீட்டில் 16 வயது சிறுமியும் அவரது பாட்டியும் தூங்கி கொண்டிருந்தனர். இரவில் மர்ம நபர் ஒருவர் ஜன்னல் வழியாக மாணவி மீதும் அவரது பாட்டி மீதும் ஆசிட் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டான். வலியால் அலறி துடித்த இருவரையும் அருகில் வசிப்பவர்கள் மீட்டு மபுசாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். 

இது குறித்து போலீஸ் துணை கண்கானிப்பாளர் மகேஷ் கோனாக்கர் கூறுகையில்,

சந்தேகத்தின் அடிப்படையில் சிலர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.