Breaking News
recent

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இலங்கை வீரர் குலசேகரா ஓய்வு



கொழும்பு,


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவரான நுவன் குலசேகரா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், தொடர்ந்து ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்றும் குலசேகரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


2005 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான குலசேகரா 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 48 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் குலசேகரா விளையாடியுள்ளார்.


173 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள குலசேகரா,186 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.