Breaking News
recent

8,318 பேர் அடங்கிய ஐ.எஸ்., படுகொலைப் பட்டியல்

லண்டன் : ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 8,318 பேர் அடங்கிய படுகொலைப் பட்டியலை வெளியிட்டுள்ளனர். இப்பட்டியலில் 7,848 பேர் அமெரிக்கர்கள்.


இதுதொடர்பாக பிரிட்டன் நாளேடான ‛டெய்லி மிரர்' செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆங்கிலம் மற்றும் அரபி மொழியில் தயாரிக்கப்பட்ட படுகொலை பட்டியலை ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, அவர்களின் ஆதரவு வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் இடம் பெற்றவர்களின் பெயர், விலாசம், இமெயில் முகவரி ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிகபட்சமாக அமெரிக்காவை சேர்ந்த 7,848 பேர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் பிரான்ஸ், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இஸ்ரேல், நியூசிலாந்து, தென்கொரியா, கிரீஸ், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் இடம் பெற்றுள்ளனர். பட்டியலில் இடம் பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் அந்தந்த நாட்டு ராணுவத்தில் பணிபுரிபவர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும் இருப்பவர்கள். மேலும் சில பிரபலங்களின் பெயர்களும், சி அரச குடும்பத்தினரின் பெயர்களும் இப்பட்டியலில் உள்ளன.

மேலும் தங்களுக்கு எதிராக செயல்படும் அவர்களை பழி வாங்க, ஐ.எஸ்., அமைப்பினர் அவர்களை படுகொலை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.