Breaking News
recent

இந்தோனேசியாவில் வெள்ளம்: 31 பேர் பலி

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து பேரிடர் மீட்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் சுதபோ பூர்வோ நுக்ரோகோ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:


சனிக்கிழமை முதல் தொடர்ந்து பெய்த மழையில் மத்திய ஜவாவில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கின. பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமான வீடுகள் தரைமட்டமாகின.

நாட்டின் ஜாவா தீவின் மத்தியப் பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் மாடிகளில் தஞ்சமடைந்து உயிர் தப்பினர். ஏராளமான வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்ததையடுத்து போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதுவரை கிடைத்த தகவலின்படி, வெள்ளம், நிலச்சரிவு பாதிப்பில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். மேலும், 19 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டவர்கள் தாற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மீட்பு பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.