Breaking News
recent

தொடரை வென்றது இலங்கை | ஜூன் 19, 2016


டப்ளின்: அயர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 136 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 2–0 என தொடரை கைப்பற்றியது
.
     
பெரேரா சதம்: இலங்கை, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி டப்ளினில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. இலங்கை அணிக்கு குசால் பெரேரா (135), தனுஷ்கா குணாதிலகா (63) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. சீக்குகே பிரசன்னா (95) நம்பிக்கை  தந்தார். தசுன் ஷனகா (1) ஏமாற்றினார். மகரூப் (29), கேப்டன் மாத்யூஸ் (24) ஓரளவு கைகொடுத்தனர். இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 377 ரன்கள் குவித்தது.      

மெக்பிரைன் அரைசதம்: கடின இலக்கை விரட்டிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் வில்லியம் போர்டர்பீல்டு (8) ஏமாற்றினார். பால் ஸ்டிர்லிங் (22), ஜான் ஆண்டர்சன் (39), ஸ்டூவர்ட் பாய்ண்டர் (36) ஆறுதல் தந்தனர். எட் ஜாய்ஸ் (9), கேரி வில்சன் (11) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். பொறுப்பாக ஆடிய ஆன்டி மெக்பிரைன் (79) அரைசதம் கடந்தார்.      

அயர்லாந்து அணி 45 ஓவரில் 241 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வி அடைந்தது. இலங்கை சார்பில் சுரங்கா லக்மல் 4 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2–0 என முழுமையாக கைப்பற்றியது. தொடர் நாயகன் விருதை இலங்கையின் ஷனகா வென்றார். 
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.