Breaking News
recent

சின்மய பிறந்த நூற்றாண்டு விழா யாழில் வெகு விமரிசை

யாழ்ப்பாணம் – சின்மயா மிஷனின் ஏற்பாட்டில் சின்மய பிறந்த நூற்றாண்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 29.05.2016 மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி வெகு விமரிசையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய துணைத் தூதுவர் ஆ. நடராஜனும், சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகனும் கலந்து கொண்டனர்.
மேலும், இந்நிகழ்வில் சமயத் துறவியர்கள், குருமார்கள், சமயப் பெரியார்கள், துறைசார் பெரியார்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பிரம்மப் பிரார்த்தனையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் ஆசியுரைகள், நூற்றாண்டு விழா மலர் வெளியீடு, இசை ஆராதனை, வில்லுப்பாட்டு, தனிநடனம், பேச்சு, வாத்திய இசைச் சங்கமம், பரிசில் வழங்கல் என்பவற்றுடன் சிறப்பாக இடம்பெற்றது.

படங்கள்: ஐங்கரன் சிவசாந்தன்
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.