Breaking News
recent

யாழ்ப்பாணம் சங்குவேலிப் பகுதியில் விவசாயி ஒருவரின் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்

யாழ்ப்பாணம் சங்குவேலிப் பகுதியில் விவசாயி ஒருவரின் வீட்டின் மீது நேற்று இரவு கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இது தொடர்பில் மேலும் தெரிய வருவது ,

சங்குவேலி கந்தரோடையில் உள்ள வீடு ஒன்றிற்கு சுமார் 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மோட்டார்சைக்கிளினை வீட்டிள் இருந்து சற்று தொலைவில் நிறுத்தி விட்டு கைக்குண்டினை வீசி எறிந்து விட்டு தப்பி ஓடயுள்ளனர்.

இருப்பினும் கைக்குண்டு வெடிக்காத காரணத்தினால் வீட்டில்இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பினர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

24News thank you....
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.